MINOR BASILICA OF ST. ANNE, BUKIT MERTAJAM

2 – 9 August 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. SUN2AUG

    பொதுக்காலம் 18 ஆம் வாரம்

    • 8.00amBMதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. MON3AUG
    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  3. TUE4AUG

    புனித ஜான் மரிய வியான்னி மறைப்பணியாளர்

    • 7.00amEதிருப்பலி
  4. WED5AUG

    தூய கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை)

    • 7.00amEதிருப்பலி
  5. THU6AUG

    ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா

    • 7.00amEதிருப்பலி
  6. FRI7AUG

    புனிதர்கள் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்து, தோழர்கள் - மறைச்சாட்சியர்

    • 8.00pmESacred Heart Chaplet followed by Mass and Adoration of the Blessed Sacrament
  7. SAT8AUG
    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmEசன்சட் திருப்பலி
  8. SUN9AUG

    பொதுக்காலம் 19 ஆம் வாரம்

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. புனித அன்னம்மாள் பெருவிழாக் கொண்டாட்டம்

    இந்த ஆண்டு புனித அன்னம்மாள் பெருவிழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய உதவிய, தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் திறமைகளை வழங்கிய அனைத்து குருக்கள், துறவிகள், பங்கு மக்கள் மற்றும் பங்கு மக்கள் அல்லாதோர் அனைவருக்கும், திருத்தொண்டர் லாசரஸ் ஆகிய நான், கர்தினால் செபஸ்டியன் பிரான்சிஸ் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அயராத முயற்சி மற்றும் அக்கறை ஆகியவை இந்தக் கொண்டாட்டத்தை ஆன்மீக ரீதியாக வளம் மிக்கதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆக்கின. உங்கள் அனைவரையும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

  2. மோசடி தடுப்புப் பேச்சு - சிறைத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது

    தேதி: 2 ஆகஸ்ட் 2026 (ஞாயிற்றுக்கிழமை)
    நேரம்: காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை

    இடம்: புனித ஜேம்ஸ் அறை, பங்கு மையம்.

    பதிவு செய்ய, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது ஸ்டீவன் பிலிப்ஸ் 017-5635090 அல்லது அன்னா தான் 012-4058125 ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

  3. புனித நிக்கோலஸ் இல்லம்

    பினாங்கில் உள்ள, பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடுடையோருக்கான புனித நிக்கோலஸ் இல்லம், நிதி திரட்டும் தொண்டு உணவுத் திருவிழாவிற்கு (charity food carnival) ஆதரவு கோருகிறது.
    தேதி: 12 செப்டம்பர் 2026

    இடம்: புனித நிக்கோலஸ் இல்லம், பினாங்கு.

    காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.

    தயவுசெய்து உணவுத் திருவிழா நுழைவுச்சீட்டுகளை நம் MBSA பங்கு அலுவலகத்திலிருந்து வாங்கவும்.

  4. சகோதரி மெர்சி

    சகோதரி மெர்சி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 7 வரை பங்குக்கு வரமாட்டார். சகோதரிக்காக உங்கள் பிரார்த்தனைகளில் நினைவுகூருங்கள். நன்றி.

Pass this bulletin along

Share on WhatsApp

பினாங்கு மறைமாவட்டம்

Looking for another parish's bulletin? Parishes across the Diocese of Penang publish theirs here too.

See other parish bulletins

Privacy · Terms