MINOR BASILICA OF ST. ANNE,BUKIT MERTAJAM, PENANG, MALAYSIA

11 – 18 October 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. ஞாயிறு11அக்.

    பொதுக்காலம் 28 ஆம் வாரம்

    • 7.30amEசெபமாலை
    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
    • 6.00pmMபெராபிட் சிற்றாலயத்தில் செபமாலை.
    • 7.00pmETCMபெராபிட் சிற்றாலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து ஊர்வலமும் ஆசீர்வாதமும் நடைபெறும்.
  2. திங்கள்12அக்.
    • 7.00amEநற்கருணை வழிபாடு
  3. செவ்வாய்13அக்.
    • 7.00amEதிருப்பலி
  4. புதன்14அக்.

    புனித முதலாம் கலிஸ்து - திருத்தந்தை, மறைச்சாட்சி

    • 7.00amEதிருப்பலி
  5. வியாழன்15அக்.

    இயேசுவின் (அவிலா நகர்) புனித தெரேசா - கன்னியர், மறைவல்லுநர்

    • 7.00amEதிருப்பலி
  6. வெள்ளி16அக்.

    புனித மார்கரீத் மரியா அலக்கோக்கு - கன்னியர்

    • 8.00pmEஇரக்கத்தின் ஆண்டவர் செபமாலை, தொடர்ந்து திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
  7. சனி17அக்.

    அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி - ஆயர், மறைச்சாட்சி

    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmEசன்சட் திருப்பலி
  8. ஞாயிறு18அக்.

    பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு, மறைப்பணி ஞாயிறு

    • 7.30amEசெபமாலை
    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. அருள்தந்தை சைமன் ஆனந்த் அவர்களுக்கு அன்பான வரவேற்பு.

    2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், புக்கிட் மெர்டாஜாமில் உள்ள புனித அன்னாள் சிறு பசிலிக்காவின் (Minor Basilica of St. Anne) பங்குத் தந்தையாகப் பணியாற்றவுள்ள அருள்தந்தை சைமன் ஆனந்த் அவர்களை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அன்போடும் வரவேற்கிறோம்.

    👍❤️13
  2. திருத்தொண்டர்கள் ஆஷ்லி ஸ்டீபன் சௌ மற்றும் பேட்ரிக் ஹிலாரி சந்தனசாமி ஆகியோரின் குருத்துவத் திருநிலைப்படுத்தல்

    நவம்பர் 10-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு, புனித அன்னாள் சிறு பேராலயத்தில் (Minor Basilica of St Anne) நடைபெறவுள்ள திருத்தொண்டர்கள் ஆஷ்லி ஸ்டீபன் சாவ் மற்றும் பேட்ரிக் ஹிலாரி சந்தனசாமி ஆகியோரின் குருத்துவத் திருநிலைப்பாட்டு விழாவிற்கு நீங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

    ❤️👍🙏9
  3. புனித அன்னாள் திருவிழாக் கொண்டாட்டம் 2027

    2027-ஆம் ஆண்டிற்கான புனித அன்னாள் திருவிழா கொண்டாட்டங்கள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    👍❤️🙏13
  4. பங்குப் பணி குறித்த அறிக்கை

    பங்கின் அனைத்து அமைப்புகள் மற்றும் குழுக்களும் தங்கள் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான, புதுப்பிக்கப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்து இவ்வறிக்கையை 2026 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மர்லினா சாரா (Marlina Sara - 013-4890106) அவர்களிடம் சமர்ப்பிக்கவும். மின்னஞ்சல்: [email protected] அறிக்கைகளை படிவத்தை பங்கு அலுவலகத்திலோ அல்லது பங்கு மேம்பப் பணிக்குழு (PPC) தலைவரான சகோதரி மர்லினா சாராவிடமோ பெற்றுக்கொள்ளலாம். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

    👍❤️3

திருமண அறிவிப்பு

  • Leonard Retnam Joseph & Johanna Nathania Lumintang

    31 October 2026 · 10.00am · English (E) · Mass

    Celebrant: Rev. Fr. Louis Loi

    33blessings
  • Oliver Tan Kit Hong & Natalie Bhatt

    30 October 2026 · 10.00am · Bahasa Malaysia (BM) · Service

    Celebrant: Deacon Lazarus Jonathan

    32blessings
  • Uvaraj & Maria Faustina

    31 October 2026 · 3.00pm · Tamil (T) · Service

    Celebrant: Rev. Fr. Nelson Joseph

    40blessings
  • If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.

திருப்பலி நோக்கங்கள்

இந்த வாரத் திருப்பலிகள் பின்வரும் கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகின்றன — இறந்தவர்களுக்காக, நன்றியறிதலுக்காக, மற்றும் சிறப்பு வேண்டுதல்களுக்காக.

பெயரைத் தேடுங்கள்

பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது தவறாக எழுதப்பட்டிருந்தாலோ, தயவுசெய்து பங்குத் தல அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.

NEWBEC Weekly Reflection

ஒன்றித்த பயணத்தின் (Synodality) அடிப்படை: வசதியான சூழலை விட்டு வெளியேறுதல்

பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு | 11 அக்டோபர் 2026 ஒன்றித்த பயணம் மற்றும் இறைவாக்கு உரைக்கும் திருஅவையை நோக்கி ஒன்றித்துப் நடத்துல் மறைத்தூதுரைக்கும் சீடத்துவத்திற்கான மக்கள்

மாதாந்திர நோக்கம்:
திருஅவை – மறைத்தூதுரைக்கும் சீடர்களாக இருத்தல்

ஒன்றித்த பயணத்தின் (Synodality) அடிப்படை: வசதியான சூழலை விட்டு வெளியேறுதல்

நமது நம்பிக்கையின் தன்மை இதுவே: அது ஆற்றல்மிக்கது மற்றும் எப்போதுமே முன்னோக்கிச் செல்வது. புனித திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவானின் வழிகாட்டுதலோடு, இது ஆன்மீக வளர்ச்சியான நமது தனிப்பட்ட அழைப்பாக அமைகிறது.

திருஅவையின் இந்தப் பயணம் என்பது ஒரு நவீன கண்டுபிடிப்பு அல்ல. இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறவும், பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவி நமக்கு அருளப்பட்ட பிறவும் இந்த 'ஒன்றித்த பயணம்' நடைமுறையில் இருந்தது. சீடர்கள் அறியாத புதிய பாதையில் அடி எடுத்து வைத்தனர். சாதகமான சூழலுக்காகக் காத்திராமல், அவர்கள் வெளியே சென்று, ஏற்றுக்கொள்ளப்படுவதன் மகிழ்ச்சியையும், நிராகரிக்கப்படுவதன் வலியையும் அனுபவித்தனர். தூதுரைப் பணியில் ஈடுபடும் சீடராக இருப்பது என்பது, அறியாத புதிய சூழலைத் துணிவுடன் ஏற்றுக்கொள்வதாகும்.

புனித திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவானின் துணிவு திருஅவையின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அவர் காலத்திற்கேற்பப் புதுப்பித்தார். நவீன உலகோடு இணைந்து செயல்படும் முயற்சியில் தூய ஆவி நிச்சயமாகத் தலையிட்டு வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் ஒரு "புதிய காற்று" (Fresh Breeze) வீசத் தொடங்கியது.

நவீன உலகிற்க ான அருள்பணிச் சீடராக திகழ அவர் முயன்றபோது, எதிர்ப்புகளும் நிராகரிப்புகளும் எழுந்தன; இருப்பினும், அவரது எளிமையும் உறுதியான மனப்பான்மையின் காரணமாக, காலத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் திருஅவை தொடர்ந்து முன்னோக்கிச் சென்றது.

முன்னேற்றம் மற்றும் பின்நோக்கிய நிலை

பின்நோக்கிய நிலை தேக்கநிலையை குறிக்கிறது. அறியாத எதிர்காலத்தை நோக்கிச் செல்ல அஞ்சுதல் மற்றும் விசுவாச வாழ்வில் தீவிரமாகப் பங்கேற்கத் தயங்குதல் ஆகியவை இதில் அடங்கும். முன்னேற்றம்: இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நம்பிக்கை முதிர்ச்சியடைய அனுமதிப்பதாகும்.

சிந்தனைக்கு

1. "அறியாத" பகுதி: நான் வித்துவிட அழைக்கப்படும் அந்த 'வசதியான சூழல்' (comfort zone) எது?
2. கிறிஸ்தவ வாழ்வு: எனது கிறிஸ்தவ விழுமியங்களின்படி வாழும்போது, நான் தூய ஆவியை சார்ந்துிருக்கிறேனா அல்லது எனது சொந்த அறிவை மட்டுமே நம்பியிருக்கிறேனா?

3. நூற்றாண்டுச் சோதனை (Century Test): வாராந்திர கடமைகளை நிறைவேற்றுவதற்குப் நான் இருக்கும் இடத்தில் ஒரு 'தூதுரைப் பணிச் சீடராக' (Missionary Disciple) என் வாழ்வைச் செயல்வடியில் வாழ்வதற்கும் இடையிலான வேறுபாடு.

"உங்களின் அச்சங்களை அல்ல, மாறாக உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கருத்தில் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய ஏமாற்றங்களைப் பற்றிச் சிந்திக்காமல், இன்னும் வெளிப்படாத உங்களைப் ஆற்றலைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் முயன்று தோல்வியுற்றவற்றைப் பற்றிச் கவலைப்படாமல், இனி உங்களால் எதைச் செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்."
- புனித திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவான்

Scripture, prayer and the closing quote

Scripture of the Day

எசாயா 25: 6-10
திருப்பாடல் 23: 1-6

பிலிப்பியர் 4: 12-14,19-20

மத்தேயு 22: 1-14 (அல்லது 22:1-10)

வெளியீடு: மாமறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையம் (API) | Email: [email protected]

Privacy · Terms