MINOR BASILICA OF ST. ANNE,BUKIT MERTAJAM, PENANG, MALAYSIA

18 – 25 October 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. ஞாயிறு18அக்.

    பொதுக்காலம் 29 ஆம் வாரம்

    • 7.30amEசெபமாலை
    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. திங்கள்19அக்.

    புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் - மறைச்சாட்சியர் நினைவு

    • 7.00amEநற்கருணை வழிபாடு
  3. செவ்வாய்20அக்.
    • 7.00amEதிருப்பலி
  4. புதன்21அக்.
    • திருப்பலி / ஆராதனை இல்லை. குருமார்களின் சி.எம்.ஆர் (CMR) கூட்டம்.
  5. வியாழன்22அக்.

    புனித இரண்டாம் அருள் சின்னப்பர், திருத்தந்தை நினைவு

    • 7.00amEதிருப்பலி
  6. வெள்ளி23அக்.

    கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் - மறைப்பணியாளர் நினைவு

    • 8.00pmEஇரக்கத்தின் ஆண்டவர் செபமாலை, தொடர்ந்து திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
  7. சனி24அக்.

    புனித அந்தோனி மரிய கிளாரட் - ஆயர் நினைவு

    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmEசன்சட் திருப்பலி
  8. ஞாயிறு25அக்.

    பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு

    • 7.30amEசெபமாலை
    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. சிறிய புனிதர்கள் ஊர்வலம் 2026

    மறைக்கல்வி வகுப்பில் பயிலும் மழலையர் பள்ளி முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள், கத்தோலிக்கப் புனிதர்களைப் போல வேடமணிந்து, நமது பங்கின் 'சிறு புனிதர்களின் ஊர்வலம் 2026'-இல் (Little Saints Procession 2026) கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
    தேதி: 31 அக்டோபர் 2026

    நேரம்: மாலை 6:00 மணி

    இடம்: புனித அன்னாள் சிறு பசிலிக்கா (Minor Basilica of St Anne)

    தயவுசெய்து QR குறியீடு இணைப்பைப் பயன்படுத்தி விரைவில் பதிவு செய்யவும்.

    ❤️2
  2. புனிதர் அனைவர் தினம் - மலர் விற்பனை

    MBSA ஆல்டர் (Alter) குழுவினர் புனிதர் அனைத்து தினத்திற்காக (All Souls Day) மலர்களை விற்பனை செய்யவுள்ளனர்.
    தேதி: அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை; இடம்: தேவாலய நுழைவாயில்.

    முன்கூட்டியே ஆர்டர் செய்ய அல்லது முன்பதிவு செய்ய விரும்பினால், தயவுசெய்து ஏஞ்சலினா ஹோ (Angelina Hoh) அவர்களை 016-4703733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  3. புனித மோனிகா பெண்கள் குழு - மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் விற்பனை

    அனைத்து ஆன்மாக்களின் நாள் (All Souls Day) தினத்தை முன்னிட்டு, புனித மோனிகா மகளிர் குழுவினர் மலர்கள் மற்றும் மெழுகுவர்த்தி விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
    தேதிகள்: அக்டோபர் 24 மற்றும் 25 (சனி மற்றும் ஞாயிறு), அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை.

    நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.

    இடம்: புனித ஆன் கல்லறைத் தோட்டம் (St Anne's Cemetery).

    இந்த விற்பனை நிகழ்வில் உதவ தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்:

    எமிலி லிம் (Emily Lim): 016-4118485

    மார்கரெட் தே (Margaret Teh): 010-5395918

    ❤️1
  4. 2027ஆம் ஆண்டு பொங்கல் விழா –இரண்டாவது நிதி வசூல் அறிவிப்பு

    2027ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, பொங்கல் விழாவிற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில், வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 15ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் இரண்டாவது நிதி வசூல் செய்யப்படும். அனைவரும் தங்களால் இயன்ற தாராளமான நிதி உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவிற்கும் தாராளமான பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

திருமண அறிவிப்பு

  • Leonard Retnam Joseph & Johanna Nathania Lumintang

    31 October 2026 · 10.00am · English (E) · Mass

    Celebrant: Rev. Fr. Louis Loi

    33blessings
  • Oliver Tan Kit Hong & Natalie Bhatt

    30 October 2026 · 10.00am · Bahasa Malaysia (BM) · Service

    Celebrant: Deacon Lazarus Jonathan

    32blessings
  • Uvaraj & Maria Faustina

    31 October 2026 · 3.00pm · Tamil (T) · Service

    Celebrant: Rev. Fr. Nelson Joseph

    40blessings
  • If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.

திருப்பலி நோக்கங்கள்

இந்த வாரத் திருப்பலிகள் பின்வரும் கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகின்றன — இறந்தவர்களுக்காக, நன்றியறிதலுக்காக, மற்றும் சிறப்பு வேண்டுதல்களுக்காக.

பெயரைத் தேடுங்கள்

பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது தவறாக எழுதப்பட்டிருந்தாலோ, தயவுசெய்து பங்குத் தல அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.

NEWBEC Weekly Reflection

ஒன்றித்துப் பயணிக்கும் சீடரின் ஐந்து ஒழுக்கநெறிகள்

பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு | 18 அக்டோபர் 2026 (Mission Sunday) மாதாந்திர நோக்கம்: திருஅவை – மறைத்தூதுவத்திற்குத் சீடர்களாக இருத்தல்

லூக்கா 1:39-40: அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

இதில், இறைமகனை அறிவிக்கும் பணியுடன் செக்கரியா மற்றும் எலிசபெத்தை நோக்கிச் செல்லும் இறைவனின் சீடராக மரியா திகழ்கிறார். அதேவேளையில், கிறிஸ்துவுக்கு முன்னோடியாக அமையவிருப்பவரைத் தம் கருவில் சுமந்து தம்மைச் சந்திக்க வரும் மரியாவை வரவேற்கும் பணியில் ஈடுபடும் இறைவனின் சீடராக எலிசபெத்தும் திகழ்கிறார்.

"சீராக இருந்து, பின்னர் பிறரைப் சீடராக்குதல்" என்பதற்கு சில ஒழுக்கநெறிகள் தேவைப்படுகின்றன:

1சந்திப்பு

நற்செய்தியைப் பறைசாற்ற, முதலில் "என்னைப் பின்பற்றுங்கள்" என்று அழைக்கும் இயேசுவை நாம் சந்திக்க வேண்டும். இயேசு உண்மையில் யார் என்பதற்கான ஆழமான பொருளை நாம் தேடி அறிய வேண்டும். இயேசுவுடனான தனிப்பட்ட சந்திப்பின் மூலம், கடவுள் மீதான நமது அர்ப்பணிப்பில் சமூகத்தில் நாம் செயல்படும் விதத்திலும் நமது கிறிஸ்தவ அடையாளம் வெளிப்படுகிறது.

2மனமாற்றம்

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவரில் நம்பிக்கைக் கொள்வது தூய ஆவியின் செயல்பாட்டின் மூலமே நிகழ்கிறது. தூய ஆவியின் தலையீட்டினால், நாம் சிந்திக்கும், வாழும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

3சீடத்துவம்

இயேசுவின் சீடராக இருக்க, நமக்கு அறிவு மற்றும் அன்பு தேவை; அத்துடன் இயேசுவின் ஆளுமை, அவரது முன்மாதிரி மற்றும் போதனைகள் ஆகியவற்றின் வழியாக அவரது மறைபொருளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது கிறிஸ்தவ வாழ்வையும் பணியையும் காத்துக்கொள்ள, தொடர்ச்சியான மறைக்கல்வி அவசியம்.

4ஒன்றிப்பு

கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தில் தொடங்குகிறது. ஒரு சீடர் திருஅவையின் வாழ்வில் பங்கேற்று, ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றி, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வார். துணைநிற்பதும் ஊக்குவிப்பதும தூய ஆவியின் மூலம் முதிற்சியடைகின்றன.

5தூதுறப்பணி

கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவமும் இறைவனின் அன்பும் கிடைக்கும்போது, தூதுறப்பணியைப் பகிர்ந்துகொள்ளும் சூழல் உருவாகிறது; அப்போது மகிழ்ச்சியும் மலர்கிறது. தேவையற்றதை அவசியமானதாக மாற்றுவதே இப்பணி. சீடத்துவத்திலிருந்து இப்பணியைப் பிரிக்க முடியாது.

சிதனை
இன்றைய கிறிஸ்தவர்களாகிய நாம், இறைவனுக்காக எப்போதும் பணிபுரியும் சீடர்களாக இருக்கத் தயாராக இருக்கிறோமா? ✜

Scripture, prayer and the closing quote

இன்றை இறைவார்த்தை

எசாயா 45: 1, 4-6
திருப்பாடல் 96: 1, 3-5, 7-10

1 தெசலோனிக்கேயர் 1: 1-5

மத்தேயு 22: 15-21

"கிறிஸ்துவில் ஒன்றித்திருத்தல் – அவரோடும் நம் சகோதர சகோதரிகளோடும் ஒருங்கிணைந்து தூதுறப்பணிசெய்யும் சீடர்கள். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் அந்த மறைபொருளே இப்பணியின் மையமாகத் திகழ்கிறது..."

— - திருத்தந்தை லியோ.

வெளியீடு: மாமறைமாவட்டம் மேய்ப்புப்பணிக் நிலையம் (API) | Email: [email protected]

சுவரொட்டிகள்

Penang State Christmas Celebration — Christmas Market vendors wanted
Penang State Christmas Celebration — Christmas Parade
Penang State Christmas Celebration — Christmas Performances

Privacy · Terms